இலங்கை
சுதந்திரதினம் இம்முறை சிக்கனக் கொண்டாட்டம்!

சுதந்திரதினம் இம்முறை சிக்கனக் கொண்டாட்டம்!
77ஆவது சுதந்திரதின விழாவை குறைந்த செலவில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்ததாவது:
77ஆவது சுதந்திரதின விழா இந்த வருடம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளது. இம்முறை மிகவும் குறைவான அழைப்பாளர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் சுதந்திரதின விழா கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி, நிகழ்வில் கலந்துக்கொள்ளவதற்கான அழைப்பாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்திலிருந்து ஆயிரத்து 600ஆகக் குறைக்கப்படும். 21 துப்பாக்கி வேட்டுகள் இம்முறை தீர்த்துக்கொள்ளப்படாது. முப்படைகள் மற்றும் பொலிஸ் அணிவகுப்பில் பங்குபற்றுநர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். ஆயுதம் ஏந்திய இராணுவ அணிவகுப்பு இம்முறை இடம்பெறாது என்பதுடன், விமானக் காட்சிகளும் மட்டுப்படுத்தப்படும் – என்றார். (ப)