Connect with us

இலங்கை

திடீரென முளைத்த தொல்லியல் பதாதைகளினால் வெடித்த போராட்டம்! திருமலையில் பரபரப்பு

Published

on

Loading

திடீரென முளைத்த தொல்லியல் பதாதைகளினால் வெடித்த போராட்டம்! திருமலையில் பரபரப்பு

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையை அகற்றக்கோரி வெருகல் பிரதேச செயலகம் முன் மக்கள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 

 “வட்டவான் தொல்லியல் நிலையம் 1 KM ” என குறிப்பிட்டு அண்மையில்குறித்த பதாகை நடப்பட்டது.

Advertisement

இச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது? அதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா?

ஏதிர்காலத்தில் அப்பகுதியில் புத்த விகாரை வருமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

 இதையடுத்து பதாகையை அகற்றக்கோரி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அநுர ஆட்சியிலும் அபகரிப்பா, தொல்லியல் காணியில் விகாரை கட்டப்படாத இடம் உண்டா,

அடுத்து புத்தர் சிலையா, பௌத்த விகாரையா? போன்ற வாசகங்களை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன