இலங்கை
தூய இலங்கைத் திட்டம் வடக்கு – கிழக்கில் கூடுதலான கவனம்!

தூய இலங்கைத் திட்டம் வடக்கு – கிழக்கில் கூடுதலான கவனம்!
தூய இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றோம். இந்த விடயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. உன்னதமான நாட்டை உருவாக்குவதற்காகவே தூயஇலங்கை வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் முக்கியமாக பங்காளிகளாக மலையக மக்களும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களும் இருப்பார்கள். அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்படும் – என்றார். (ப)