இலங்கை
தூய இலங்கைத் திட்டம்: 2 நாள்களுக்கு விவாதம்!

தூய இலங்கைத் திட்டம்: 2 நாள்களுக்கு விவாதம்!
தூய இலங்கைத் திட்டத்தின் கீழ், நாடாளுமன்றத்தில் இரண்டு நாள்களுக்கு விவாதம் நடத்தப்படும் என்று பிதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின்போது தூய இலங்கைத் திட்டம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதையடுத்தே, இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்படும் என்று பிரதமர் ஹரிணி கூறியுள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் ஹரிணி மேலும் தெரிவித்ததாவது:
தூய இலங்கைத் திட்டம் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவூட்டலை வழங்குவதே இந்த சிறப்பு விவாதத்தின் நோக்கமாகும். தூய இலங்கைத் திட்டத்தை பலவந்தமாகச் செயற்படுத்த முடியாது. அதன் நோக்கத்தை உணர்ந்து அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம் – என்றார். (ப)