சினிமா
பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்! எத்தனை கோடிக்கு சொந்தக்காரர் தெரியுமா?

பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்! எத்தனை கோடிக்கு சொந்தக்காரர் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இசையுலகில் அரசனாக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரின் இசையில் அமைந்த பாடல்கள் இதயம் தொட்டு இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ளது. பலகோடி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த இசையரசன் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.இயக்குநர் கௌதம் மேனனின் “மின்னலே” படம் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கினார். பிரபல நடிகர்களான கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைவரின் படங்களுக்கும் இவர் இசையமைத்த பாடல்கள் செம ஹிட்டாகின. தற்போது இவரது இசையமைப்பில் அடுத்து “துருவ நட்சத்திரம்” படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.20 ஆண்டுகளுக்க மேலாக படங்களுக்கு இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஸ் இசையில் மட்டுமில்லாது பிஸினஸிலும் மாஸ் காட்டி வருகிறார்.கிட்டத்தட்ட மொத்தமாக ரூ. 150 கோடி வரை சொத்துவைத்திருக்கிறார். இவரின் பிறந்தநாள் முன்னிட்டு பிரபலங்கள் பலரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.