இலங்கை
மணல் அகழ்வுக்காக போலியான பத்திரம் தயாரித்தவர் கைது!

மணல் அகழ்வுக்காக போலியான பத்திரம் தயாரித்தவர் கைது!
மணல் அகழ்வுக்காக போலியான அனுமதிப் பத்திரம் தயாரித்து வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான சந்தேகநபர், மணல் அகழ்வில் ஈடுபடுவதற்காக போலியான அனுமதிப் பத்திரத்தைத் தயாரித்து வைத்திருந்தார் என்றும், அந்தப் பத்திரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாவகச்சேரி நீதிமன்றத்தில் அவர் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (ப)