சினிமா
விபத்தின் பின் கார் ரேஸ் பயிற்சியில் அஜித் கலந்து கொண்டாரா..?

விபத்தின் பின் கார் ரேஸ் பயிற்சியில் அஜித் கலந்து கொண்டாரா..?
சினிமா கார் பந்தயங்கள் என மிகவும் பிஸியாக இருக்கும் தல அஜித் தற்போது விடாமுயற்சி,குட் பேட் அக்லி எனும் இரண்டு படங்களில் நடித்து முடித்து வெளியீட்டிற்கு காத்திருக்கின்றார்.தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படத்தில் மாத்திரம் நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு விடுத்திருந்தார்.தற்போது துபாயில் கார் பந்தயத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.இந்நிலையில் நேற்றைய தினம் இவரது கார் பாரிய விபத்தில் சிக்கி இவர் நொடி இழையில் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியிருந்தது.விபத்தில் எதுவித காயமும் ஏற்படாமல் தப்பிய இவர் இன்று நடைபெற்ற பயிற்சியில் உடல் நலத்துடன் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நாளை நடைபெறவுள்ள அணிவகுப்பில் இவர் கலந்து கொண்டு கார் ஓட்ட உள்ளதாகவும் ஜனவரி 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் அஜித் கலந்துக் கொள்வாரா இல்லையா என்பது தொடர்பான அறிவிப்பு வருகின்ற 10ம் தேதி வெளியாகும் என்பதும் தெரிய வந்துள்ளது.