இலங்கை
11 டொல்பின்கள் நேற்று வில்பத்தில் ஒதுங்கின!

11 டொல்பின்கள் நேற்று வில்பத்தில் ஒதுங்கின!
வில்பத்து தேசிய பூங்காவின் கடல் எல்லைக்கு உட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 டொல்பின்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
டொல்பின்கள் உயிரிழந்தமை தொடர்பான தகவல்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
முதல்கட்டத் தகவலின் அடிப்படையில் வலையில் சிக்கியமையால் டொல்பின்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், டொல்பின்களின் இறப்புக்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்காக மாதிரிகள் பேராதனை கால்நடை மருத்துவ பீடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. (ப)