Connect with us

சினிமா

45 வயதாகியும் மகன் திருமணம் செய்யாமல் இருக்க இவர்தான் காரணம்!! உண்மையை கூறிய பிரபாஸின் தாயார்..

Published

on

Loading

45 வயதாகியும் மகன் திருமணம் செய்யாமல் இருக்க இவர்தான் காரணம்!! உண்மையை கூறிய பிரபாஸின் தாயார்..

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராகவும் பான் இந்தியன் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகர் பிரபாஸ், சலார், ஆதிபுருஷ் உள்ளிட்ட தொடர் தோல்வி படங்களை சந்தித்து வந்தார். அதன்பின் கல்கி படத்தில் நடித்து அதனை ஈடுசெய்தாலும் விமர்சனம் ரீதியாக கலவையாக பேசப்பட்டார்.கண்ணப்பா உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் பிரபாஸ், 46 வயதை எட்டவிருக்கும் நிலையில் கூட திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்கிறார்.இந்நிலையில் பிரபாஸின் தாயார் அளித்த பேட்டியொன்றில் மகன் திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து பகிர்ந்துள்ளார். எனது மகன் பிரபாஸுக்கு ரவி என்ற நண்பர் இருக்கிறார். ரவியின் திருமண வாழ்க்கை நன்றாக அமையவில்லை. அந்தத் திருமண வாழ்க்கை ரொம்பவே போராட்டம் நிறைந்ததாக அமைந்தது. அதை அவரும் சகித்துக்கொண்டார்.இருந்தாலும் அந்த திருமண வாழ்க்கை கடைசியில் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டது. எனவே திருமண வாழ்க்கை என்றாலே இப்படித்தான் விரைவில் பாதியில் உடியும் என்ற எண்ணம் பிரபாஸ் மனதில் ஆழமாக ஊன்றிவிட்டதால் தான் அவர் திருமணத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்று பிரபாஸ் தாயார் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன