Connect with us

இலங்கை

இலங்கைக்குள் நுழைய காத்திருக்கும் ஒரு லட்சம் அகதிகள்! ஆட்கடத்தல் கும்பல் நடவடிக்கை

Published

on

Loading

இலங்கைக்குள் நுழைய காத்திருக்கும் ஒரு லட்சம் அகதிகள்! ஆட்கடத்தல் கும்பல் நடவடிக்கை

எதிர்வரும் நாட்களில் ஒரு லட்சம் அகதிகள் கடல் வழியாக இலங்கைக்குள் நுழைய காத்திருப்பதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் ரோஹிங்கியா அகதிகள் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

“மியன்மாரில் இருந்து 116 சட்டவிரோத குடியேறிகள் தற்போது நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

அவ்வாறு வருவதற்கு அகதிகள் பணம் கொடுத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அண்மையில், வந்த படகிற்கு அந்த நாட்டு நாணய மதிப்பில் 5 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, போக்குவரத்துக்காக மேலும் 80 மில்லியன் ரூபாய்கள் செலுத்தப்பட்டன.

Advertisement

அவர்கள் அகதிகளாக இருந்தால், சர்வதேச சட்டத்தின்படி செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு தேவையான உணவு  உட்பட அத்தியாவசிய வசதிகள் வழங்கப்படுகின்றன.

பொலிஸார் மற்றும் உளவுத்துறை அறிக்கைகளுக்கமைய, எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற ஒரு லட்சம் சட்டவிரோத குடியேறிகள் இலங்கைக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை நம் ஒரு சமூகப் பிரச்சினையாக நாங்கள் அங்கீகரிக்கிறோம். அவர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டால், அவர்களுக்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளும் பிற உதவிகளும் வழங்கப்படும். இன்னும் அங்கு இருப்பவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன.

Advertisement

தற்போது இந்த நாட்டில் உள்ள அகதிகளை அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவது குற்றமாகும். அவர்களை வேறு நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, அவர்களை நாடு கடத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும், தற்போது மியான்மருடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன