சினிமா
கடலில் பேய் இருக்குமா..? இல்லையா..? ஜி. வி பட டீஸர் வெளியீடு..!

கடலில் பேய் இருக்குமா..? இல்லையா..? ஜி. வி பட டீஸர் வெளியீடு..!
கமல் பிரகாஷ் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ்,நடிகை திவ்யபாரதி மீண்டும் ஜோடியாக நடித்து உள்ள படம் ‘கிங்ஸ்டன்’. இந்த படத்தின் முதல் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதாவது தூத்துக்குடி கடலில் சிலர் காணாமல் போவதும் அதை சிறுவனாக இருக்கும் “கிங்” எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜி.வி பெரிய ஆளாக வளர்ந்து குறித்த கடலில் இருக்கும் மர்மத்தை தேடி அலைவது போன்ற சாயலில் இக் கதைக்களம் தொடர்வது போன்று கட்டப்பட்டுள்ளது.”நடுக்கடலில் பேய் இருக்குமா..?இல்லையா..?” படத்தின் சஸ்பென்ஸ் உடன் கூடிய டீஸர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தின் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.வீடியோ இதோ..