இலங்கை
கிளிநொச்சியின் அனைத்து சாரதிகள், நடத்துனர்களின் கவனத்திற்கு!

கிளிநொச்சியின் அனைத்து சாரதிகள், நடத்துனர்களின் கவனத்திற்கு!
கிளிநொச்சியில் 01.01.2025 அன்று அமுலுக்கு வரும் வகையில் சாரதி நடத்துனர் அனைவருக்கும் பணியில் ஈடுபடும் போது தலைமுடி கட்டையாக வெட்டி முகசவரம் செய்து சுத்தமாக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வட்டக் கழுத்து உள்ள பனியன் அணிய கூடாது, உள்ளாடைகள் வெளித்தெரியுமாறு ஜீன்ஸ் அணிய கூடாது, புகைத்தல்/ மதுபானம் அருந்துதல் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் மீறப்படும் ஏதாவதொரு ஒரு சந்தர்ப்பத்தில் தாங்கள் பேருந்தில் சாரதியாக அல்லது நடத்துனராக பணிபுரிய முடியாது என கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து, சீற்றூர்ந்து உரிமையாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.