பொழுதுபோக்கு
கோபியை கூண்டில் ஏற்றிய பாக்யா: ஈஸ்வரிக்கு வைத்த பெரிய செக்; ராதிகா வாழ்க்கை என்னவாகும்?

கோபியை கூண்டில் ஏற்றிய பாக்யா: ஈஸ்வரிக்கு வைத்த பெரிய செக்; ராதிகா வாழ்க்கை என்னவாகும்?
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தினசரி எபிசோடுகள், காமெடியாகவும் விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருக்கிறது. இந்த கலகலப்புக்கு பிரேக் போடும் வகையில் தற்போது அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ப்ரமோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. 3 குழந்தைகளுக்கு அப்பாவான கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், பாக்யா தனது குடும்பத்திற்காக முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருந்தார். ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய கோபி, நிம்மதி இல்லாமல் தவித்து வந்தார்.அதே சமயம் பாக்யாவின் முன்னேற்றத்தை கண்டு பொறாமையில் பல தவறுகளை செய்தார். பாக்யாவின் ரெஸ்டாரண்டில், பிரியாணி செய்யும்போது அதில் கெட்டு இறைச்சியை கலந்தார். இதற்காக பாக்யா போலீசில் கம்ளைண்ட் கொடுத்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோபி, ஜாமினில் வெளியில் வந்தார். அதன்பிறகு, ராதிகாவுக்கு இந்த விஷயம் தெரியவர இருவருக்கும் சண்டை எழுந்தது.ஒரு கட்டத்தில் பாக்யாவிடம் சண்டை படித்துக்கொண்டு வெளியேறிய கோபி, ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டபோது, பாக்யா அவரை காப்பாற்றியிருந்தார். அதன்பிறகு பாக்யாவுக்கு ஆதரவாக பேசும் கோபி, இப்போது திருந்திவிட்டதாக சொல்ல, ஈஸ்வரி கோபியையும் பாக்யாவையும் சேர்த்துவைக்க ப்ளான் போடுகிறார். ஆனால், பாக்யா, இனிமேல் கோபியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று சொல்லி விடுகிறார்.அதே சமயம், ராதிகாவுடன் கோபியை சேர்த்து வைக்கும் முயற்சியில் அவர்களை தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். இதனால் கடந்த சில நாட்கள், கலகலப்பாக சென்ற எபிசோடு அடுத்து விறுவிறுப்பாக செல்ல உள்ளது. அடுத்து வர உள்ள எபிசோடுகளில், கோபி மேல் பாக்யா கொடுத்த கம்ளைண்ட் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. அப்போது கோபி நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று வீட்டில் சொல்கிறார்.நீதிமன்றத்திற்கு செல்லும்போது, ராதகாவை பார்த்துக்கொண்டே கூண்டில் ஏறும் பாக்யா அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்ற லைனுடன் ப்ரமோ முடிவடைகிறது. இதனால் பாக்யா அடுத்து என்ன முடிவு செய்வார், ராதிகா வாழ்க்கைக்காக கேஸை வாபஸ் வாங்குவாரா? அல்லது கோபிக்கு தண்டனை வாங்கி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“