பொழுதுபோக்கு
சூரியன் செல்பி எடுக்கிறாரோ? சாய் காயத்ரி ஸ்டைலிஷ் க்ளிக்ஸ் வைரல்!

சூரியன் செல்பி எடுக்கிறாரோ? சாய் காயத்ரி ஸ்டைலிஷ் க்ளிக்ஸ் வைரல்!
மதுரையை சேர்ந்த நடிகை சாய் காயத்ரி சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தார்.ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார்.2011ல் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார்.பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்துள்ளார்.ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமான சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி மருமகள் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்திருந்தார்.அதேபோல் ஜெயாடிவியில் கில்லாடி ராணி என்கிற ஸ்பெஷல் ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார். அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த இவர் ஒரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்தும் விலகினார்.அடுத்து படங்களில் நடிக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பின், நீ நான் காதல் என்ற சீரியலில் அனுராதா என்ற கேரக்டரில் நடித்து வந்தார்.சாய் காயத்ரி, தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். தற்போது படங்களில் நடிக்க முயற்சித்து வரும் சாய் காயத்ரி, சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம்.