இந்தியா
டாப் 10 நியூஸ் : பொங்கல் பரிசு வழங்கும் ஸ்டாலின் முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வரை!

டாப் 10 நியூஸ் : பொங்கல் பரிசு வழங்கும் ஸ்டாலின் முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வரை!
சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 9) தொடங்கி வைக்கிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும், காங்கிரஸ் நிர்வாகிகளும் சந்தித்து பேச உள்ளனர்.
இஸ்ரோ தனது யூடியூப் வலைதளத்தில் SPACE DOCKING பணியை நாளை காலை 8 மணிக்கு நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக டாக்கிங் இணைப்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆந்திரா சந்திரபாபு நாயுடு இன்று திருப்பதி சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
மதுரை கூடல் நகர் ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக செங்கோட்டை – மயிலாடுதுறை, நாகர்கோவில் – மும்பை குருவாயூர் – சென்னை எழும்பூர், திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி உள்ளிட்டஒன்பது ரயில்கள் இன்று மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடி மாணவர்களால் நடத்தப்படும் 51ம் ஆண்டு சாரங் கலாச்சார விழா இன்று முதல் 13-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் 80,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் தமிழ் டீசரை இன்று மாலை 6.01 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்.
NMMS தேர்வு விண்ணப்பத்தை இன்று முதல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39க்கும் விற்பனையாகி வருகிறது.