சினிமா
டோட்டலா அப்செட்டான தில்ராஜிக்கு ஷங்கர் கொடுத்த பூஸ்ட்.. அஞ்சலியால் மாறிப் போன கேம் சேஞ்சர்

டோட்டலா அப்செட்டான தில்ராஜிக்கு ஷங்கர் கொடுத்த பூஸ்ட்.. அஞ்சலியால் மாறிப் போன கேம் சேஞ்சர்
மொத்த எதிர்ப்பையும் மீறி ஆந்திராவில் தில்ராஜ் பல விஷயங்களை செய்து வருகிறார். ஏற்கனவே அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தை தயாரித்து ஆந்திராவில் வெளியிட்டதால் ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது.
தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் ஓனர் என ஆந்திராவில் கொடி கட்டி பறந்து வருகிறார் தில்ராஜ். இங்கே உதயநிதி போல் அங்கே அவரும் ஒரு பெரிய தலைக்கட்டு. 2023 பொங்கல் விடுமுறையில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் வாரிசு. ஒரு தமிழ் படத்தை, விடுமுறை நாளில் எப்படி இங்கே திரையிடலாம் என ஆந்திராவில் வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்தனர்.
இப்படி பல பிரச்சனைகளை தாண்டி வந்தவர் தயாரிப்பாளர் தில்ராஜ் . இப்பொழுது சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் இவர் தயாரித்த படம் கேம் சேஞ்சர். இந்த படம் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தயாரிப்பதற்கு முன் தில்ராஜுக்கு ஏகப்பட்ட மனநெருக்கடியை கொடுத்துள்ளனர்.
ஷங்கர் எடுத்த படம் இந்தியன் 2 ஓடவில்லை. அட்டர் பிளாப்பாகி அவர் பெயர் கெட்டுப் போனது. அவரிடம் இருந்த சரக்கு அனைத்தும் தீர்ந்துவிட்டது. அவரை நம்பி படம் எடுக்காதே என ஏகப்பட்ட எதிர்ப்புகள் தில் ராஜிக்கு வந்துள்ளது.
யார் சொல்லியதையும் கேட்காத தில்ராஜுக்கும் முடித்த படத்தை பற்றி ஆழ்மனதில் ஒரு அழுத்தம் இருந்து கொண்டு தான் இருந்துள்ளது. தற்போது அதனை எல்லாம் போக்கியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். படத்தை அவரிடம் போட்டு காண்பித்து மிரளவைத்துள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தில் அஞ்சலி சம்பந்தமான ஒரு போர்ஷன் இருக்கிறதாம். படத்திற்கே தூண் அதுதானாம். அந்த காட்சிகளை பார்த்து தில்ராஜ் மெய்சிலிர்த்து விட்டாராம். எப்படியும் படம் ப்ளாக் பஸ்டர் என தெம்பாய் டபுள் பூஸ்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.