Connect with us

பொழுதுபோக்கு

பழம்பெரும் பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்தரன் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

Published

on

P Jayachandran

Loading

பழம்பெரும் பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்தரன் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

தமிழ், மலையளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில், 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன்(80) உடல்நலக் குறைவால் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் மரணமடைந்தார்.1967-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான உத்யோகஸ்தா என்ற படத்தின் மூலம் பாடகராக சினிமாவில் அறிமுகமானவர் பி.ஜெயச்சந்திரன். தொடர்ந்து 1973-ம் ஆண்டு தமிழில் வெளியான மணிப்பயல் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜெயச்சந்திரன், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 16,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.காதல், ஏக்கம் மற்றும் பக்தி போன்ற உணர்ச்சிகளின் சாரத்தைப் தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய் இவர், அவரது காலத்தால் அழியாத பல கிளாசிக்கல் பாடல்களை கொடுத்துள்ளார். 1944 மார்ச் 3-ந் தேதி எர்ணாகுளத்தில் பிறந்த ஜெயச்சந்திரன், திரிபுணித்துரா கோவிலகம் மற்றும் பாலியம் அரண்மனையின் பிரபுத்துவ வம்சாவளியைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே, இசையின் மீது ஈடுபாடுடன் இருந்த இவர், செண்டை மற்றும் மிருதங்கம் போன்ற தாள வாத்தியங்களில் பரிசோதனை செய்தார்.ஒரு உற்சாகமான பாடகரான அவரது தந்தை, மகனின் இசைத் திறமையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். குஞ்சலிமாரிக்கர் படத்திற்காக அவரது முதல் பாடலான “ஒரு முல்லப்பூமாலையுமாய்” பாடகராக தொடங்கினார். ஆனால் இந்த படம் தாமதமானாலும், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் அவரது திறமையை உணர்ந்து, கலிதோழன் படத்தில் அவருக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கினார். அந்தப் படத்திலிருந்து அவர் பாடிய முதல் பாடலான “மஞ்சளையில் முங்கித் தோர்த்தி” என்ற பாடல் பெரிய ஹிட் பாடலாக அமைந்தத.மேலும் இந்த பாடல் அவரை ஒரு முக்கிய பின்னணிப் பாடகராக நிலைநிறுத்தியது. சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய திரைப்பட விருது, 5 கேரள மாநில திரைப்பட விருதுகள், 4 தமிழ்நாடு மாநில விருதுகள், கலைமாமணி விருது மற்றும் சினிமாவில் கேரளாவின் மிக உயர்ந்த கௌரவமான ஜே.சி. டேனியல் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள ஜெயச்சந்தரன், அவரது கலைப் பங்களிப்புகளுக்காக மட்டுமல்லாமல், அவரது பணிவு மற்றும் ரசிகர்களுடன் ஆழமான தொடர்புக்காகவும் அவர் கொண்டாடப்பட்டார்.பாடல் வரிகள் மற்றும் மெல்லிசைகளின் சாரத்தை உள்ளடக்கிய அவரது திறன் அவரை இசையமைப்பாளர்கள் மற்றும் பாடல்களை ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு விருப்பமான பாடகராக மாறினார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன