Connect with us

டி.வி

பிக்பாஸில் 8 கோமாளிஸ்..?? விஷ்ணு போட்ட ட்விட்டால் கிளம்பிய சர்ச்சை.! தரமான சம்பவம் லோடிங்

Published

on

Loading

பிக்பாஸில் 8 கோமாளிஸ்..?? விஷ்ணு போட்ட ட்விட்டால் கிளம்பிய சர்ச்சை.! தரமான சம்பவம் லோடிங்

பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் விஷ்ணு விஜய். இவர் சீரியல் நடிகராகவும் காணப்படுகின்றார். அந்த சீசனில் விஷ்ணு விஜய்க்கும் பூர்ணிமாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் அதனை ஒரு கட்டத்தில் விஷ்ணு விஜயே நசுக்கிவிட்டார்.சின்னத்திரையில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் நடித்தவர் விஷ்ணு விஜய். ஆனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்று கொடுத்த சீரியலாக  சத்யா சீரியல் காணப்படுகின்றது. அந்த சீரியலில் இவர் அப்பாவித்தனமான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஆயிஷா ரவுடி பேபி கேரக்டரில் நடித்திருந்தார்.d_i_aஇதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் எட்டில் தனது தோழியான சௌந்தர்யா சார்பில் என்ட்ரி கொடுத்திருந்தார் விஷ்ணு. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் சௌந்தர்யா பிக் பாஸ் வீட்டில் வைத்து விஷ்ணுவுக்கு லவ் ப்ரொபோஸ் செய்திருந்தார். அதனை அவரும் மறுக்கவில்லை.சௌந்தர்யா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு இருவரும் காதலர்களாக கொஞ்ச நாட்களுக்கு தமது வாழ்க்கையை தொடர உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் எப்படியும் எங்களுடைய திருமணம் நடைபெறும் எனவும் விஷ்ணு தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட போஸ்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.. அதில் ‘8  ஃபைனலிஸ்ட் vs 8 கோமாளிஸ்..’ என குறிப்பிட்டுள்ளார். அதாவது தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பைனலுக்காக போட்டி போட்டு வரும் நிலையில், ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே சென்ற எட்டு போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்கள். அவர்களை சுட்டிக்காட்டும் வகையிலேயே எட்டு கோமாளிஸ் என விஷ்ணு தெரிவித்து உள்ளார். தற்போது அவருடைய பதிவு வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன