நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 09/01/2025 | Edited on 09/01/2025

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் ‘சவதீகா…(Sawadeeka)’ பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.   

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளதாக டீசரில் குறிப்பிட்டது. ஆனால் பின்பு இப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. படம் தள்ளிப்போனதற்கு ஒரு காரணமாக காப்புரிமை இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் 1997ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘பிரேக்டவுன்’ படத்தின் தழுவலாக இருப்பதாக பேசப்பட்ட நிலையில் பிரேக்டவுன் படக்குழுவினர் லைகா நிறுவனத்திடம் தங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாக கூறி ரூ.100 கோடிக்கும் மேல் பணம் கேட்டுள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. அது இன்னும் தீரவில்லை என கோலிவுட் வட்டாரத்தினர் சொல்கின்றனர். 

Advertisement

இந்த நிலையில் இப்படத்தை இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் வெளியிடும் பிளானில் படக்குழு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக ஒரு சென்சார் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இப்படம் 2.30 மணி நேரம் ஓடக்கூடியதாகக் குறிப்பிட்டுள்ளது.