இலங்கை
வத்தேகமவில் இடம்பெற்ற படுகொலை… தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் சிக்கினர்!

வத்தேகமவில் இடம்பெற்ற படுகொலை… தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் சிக்கினர்!
கண்டி மாவட்டத்தில் உள்ள வத்தேகம பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் ஜனவரி 04 ஆம் திகதி வத்தேகம, அதலஹகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அதலஹகொட பகுதியில் நபரொருவரை கூரிய ஆயுதங்களால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர்கள் நேற்று (08-01-2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25, 35 மற்றும் 37 வயதுடைய கரந்தெனிய, கேகாலை மற்றும் ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.