பொழுதுபோக்கு
இப்போதைக்கு முடிவு இல்ல: எதிர்நீச்சல் ஸ்டைலில் மீண்டு வரும் திகில் தொடர்; நியூ அப்டேட்

இப்போதைக்கு முடிவு இல்ல: எதிர்நீச்சல் ஸ்டைலில் மீண்டு வரும் திகில் தொடர்; நியூ அப்டேட்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாயாஜலத் தொடரான நினைத்தாலே இனிக்கும் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படத்தியுள்ளது.சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணி சேனல்களுக்க டஃப் கொடுத்து வரும் ஜீ தமிழில் அவ்வப்போது புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல் பழைய சீரியல்களையும் விறுவிறுப்பக்காக கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஜீ தமிழ் சீரியல்களை பொறுத்தவரை சாதாரன குடும்ப கதையாக தொடங்கும் ஒரு சீரியல் ஒரு கட்டத்திற்கு மேல் மாயாஜாலத் தொடராக மாற்றப்பட்டு ஒளிபரப்பாவது வழக்கம்.அந்த வகையில், மாரி, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட சீரியல்கள், தொடக்கத்தில் குடும்ப கதையாக தொடங்கி இப்போது பேய், பிசாசு, மாந்திரீகம் என தொடர்ந்து மாயாஜால காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்களுக்கு முன்னோடியாக இருக்கும் சீரியல் தான் நினைத்தாலே இனிக்கும். ஆனந்த் செல்வன், சுவாதி சர்மா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல், குடும்ப கதையாக சுவீட் கடை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை பற்றி சொன்னது.ஒரு கட்டத்தில் இந்த குடும்பத்தில் இருந்த மருமகள் பொன்னி கொல்லப்பட்டவுடன், மாயாஜாலத் தொடராக மாறிய நினைத்தாலே இனிக்கும் சீரியல், இடையில், நாயகன் குடும்பம் ஒரு அரச குடும்பம் என்ற ப்ளாஷ்பேக் காட்சிகள் கூட ஒளிபரப்பானது. நாயகன் குடும்பம் வில்லியின் வலையில் சிக்குவதும் பின்னர் அதில் இருந்து மீண்டு வருவதும் என தொடர்ந்து விறுவிறுப்பாக சென்றகொண்டிருக்கும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.A post shared by Tele5 Zone (@tele5zone)இப்போது சீரியல் விறுவிறுப்பாகத்தானே சென்றகொண்டு இருக்கிறது ஏன் முடிக்க வேண்டும் என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், சீரியல் குழு தற்போது புதிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 1000 எபிசோடுகளை கடந்த வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல், இப்போதைக்கு முடியாது என்றும், இன்னும் சில மாதங்கள் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 20-ந் தேதி முதல இரவு 10.30 மணிக்கு நினைத்தாலே இனிக்கும் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“