சினிமா
எப்படி இருக்கு கேம் சேஞ்சர் விமர்சனம் – Game DANGER!! ஐய்யா ஷங்கரு… புலம்பும் ரசிகர்கள்..

எப்படி இருக்கு கேம் சேஞ்சர் விமர்சனம் – Game DANGER!! ஐய்யா ஷங்கரு… புலம்பும் ரசிகர்கள்..
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி இன்று ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகியுள்ள படம் கேம் சேஞ்சர்.படம் எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில் இன்று படம் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது. பாடல்களுக்கு மட்டுமே 75 கோடி செலவில் எடுக்கப்பட்ட கேம் சேஞ்சர் படத்தினை பார்த்து நெட்டிசன்கள் சிலர் கலாய்த்தும் வருகிறார்கள்.அதாவது, பல கோடியில் உருவாகிய Lyraanaa பாடல் படத்தில் இருந்து எடுத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.கேம் செஞ்சர் படத்தினை பார்த்து ஒருசிலர் முதல் பாதியில் 25 நிமிட ஃபிளாஸ்பேக் காட்சி நன்றாக இருப்பதாகவும் ராம் சரணின் நடிப்பில் சிறப்பாகவும் இருப்பதாக கூறி வருகிறார்கள்.மேலும், Game DANGER, சில லாஜிக் மீறல்கள் ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறியிருப்பதாக ஷங்கரை கலாய்த்து வருகிறார்கள்..