இலங்கை

கண்டாவளையில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக காசோலை வழங்கி வைப்பு!

Published

on

கண்டாவளையில் தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக காசோலை வழங்கி வைப்பு!

தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 44 செய்கையாளர்களுக்கு ஒரு தென்னைக்கு 100ரூபா வீதம் காசோலை இன்று(09) வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தில் நடைபெற்றது.

Advertisement

காசோலைகளை தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிராந்திய முகாமையாளர் ஈ.சற்குணன், கண்டாவளை பிரதேசத்திற்குரிய தென்னை பயிர்ச்செய்கை சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.ஜெயேந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2லட்சத்து52ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது. இதேவேளை ஏழு பயனாளிகளுக்கு கப்ருக்க திட்டத்தின் மூலம் கடனுக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version