இலங்கை
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் சாவு!
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் சாவு!
கிளிநொச்சி ஏ-9 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை(10) காலை 5.45மணியளவில் யாழ். பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்தில் கனேசபுரம் கிளிநொச்சியை சேர்ந்த 75வயது குமரேஸ்வரன் யோகலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.