இலங்கை

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திடீரென கொட்ட ஆரம்பித்த முடி; 72 மணி நேரத்தில் வழுக்கை; அச்சத்தில் மக்கள்!

Published

on

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திடீரென கொட்ட ஆரம்பித்த முடி; 72 மணி நேரத்தில் வழுக்கை; அச்சத்தில் மக்கள்!

  இந்திய கிராமம் ஒன்றில் உள்ள மக்களுக்கு திடீரென முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கையாவதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, புல்தானா மாவட்டத்தில் உள்ள பாண்ட்கான், கல்வாட், ஹிங்னா கிராமங்களில் இவ்வாறு அங்குள்ள மக்களுக்கு முடி உதிர்வதாக கூறப்படும் நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

அங்குள்ள ஆண், பெண் என இருவரும் கடந்த சில வாரங்களாக முடி உதிர்தல் பிரச்சனைக்கு உள்ளாகி வருகின்றனர். இதில், பலருக்கு வழுக்கை தலை ஆகும் அளவுக்கு பிரச்னை ஏற்படுகிறது.

இவர்களுக்கு, உச்சந்தலையில் சிறிது அரிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, சில நாட்களுக்கு பின் ரோமத்தின் தன்மை சொரசொரப்புடன் மாறுதல் ஏற்பட்டு 72 மணி நேரத்தில் வழுக்கையாகி தானாகவே முடி உதிர்ந்து விடுகிறது.

அவர்கள் தங்களது தலைமுடியை லேசாக கோதினாலும் மொத்த முடியும் வந்து விடுவதாக கூறுகின்றனர்.

Advertisement

இந்த மூன்று கிராமங்களில் சுமார் 50 பேருக்கு கடந்த ஒரு வாரத்தில் முடி உதிர்ந்துள்ளதால் அச்சம் நிலவுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கான காரணம் என்னவென்று இன்னும் கண்டறியவில்லை.

Advertisement

இருந்தாலும் மாவட்ட அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று தண்ணீர் மாதிரிகளை எடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, முடி மற்றும் தோல் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் ரமா பாட்டீல் கூறுகையில்,

“கடந்த 10 நாட்களாக எங்கள் கிராமங்களில் ஒருவித மர்ம நோய் பரவுகிறது. முடியை தொட்டாலே உதிர்கிறது” என்றார்.

Advertisement

 இந்த 2நிலையில்  முடி கொட்டுவது  சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version