திரை விமர்சனம்
டேஞ்சரில் இருந்த ஷங்கரை காப்பாற்றியதா கேம் சேஞ்சர்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

டேஞ்சரில் இருந்த ஷங்கரை காப்பாற்றியதா கேம் சேஞ்சர்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
இயக்கத்தில் நடிப்பில் உருவாகி இருக்கும் இன்று வெளியாகி இருக்கிறது. நேரடி தெலுங்கு படமான இது தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளது.
தெலுங்கு ரசிகர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் படத்திற்கு இப்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் சில நெகட்டிவ் கருத்துகளும் வருகிறது.
அதில் தற்போது ஒரு சில ரசிகர்கள் இப்படம் ஷங்கருக்கு நல்ல ஒரு கம் பேக் என கூறி வருகின்றனர். ஏனென்றால் இந்தியன் 2 படத்தால் அவருடைய நிலைமை கொஞ்சம் டேஞ்சரில் தான் இருந்தது.
ஒரு வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதன்படி ராம்சரணின் நடிப்பு ஒரு மேஜிக்கை உருவாக்கி விட்டது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதே சமயம் பாடல்கள், பிஜிஎம், எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு என படத்தில் பல பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கிறது. இருப்பினும் சில விஷயங்களில் சங்கர் தடுமாறி விட்டதாகவும் கருத்துக்கள் வந்துள்ளது.
தற்போது முதல் காட்சியை பார்த்துள்ள ஆடியன்ஸ் இப்படியான விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில் அடுத்தடுத்த காட்சிகளின் முடிவுகள் என்ன என்பது தான் படத்தின் வெற்றியை முடிவு செய்யும்.