சினிமா
மோகம் யாரை விட்டுச்சு? நடிகையை காதல் வலையில் வீழ்த்திய சுகுமார்.! பொலிஸார் கிடுக்குப்பிடி

மோகம் யாரை விட்டுச்சு? நடிகையை காதல் வலையில் வீழ்த்திய சுகுமார்.! பொலிஸார் கிடுக்குப்பிடி
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவராக காணப்பட்டவர் தான் காதல் சுகுமார். இவர் சக்தி என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல பிரபலத்தை பெற்றுக் கொடுத்த படம் காதல். இதனால் தான் அவர் காதல் சுகுமார் என்று அழைக்கப்படுகின்றார்.சுகுமார் பார்ப்பதற்கு வடிவேல் போல இருந்ததாலும் அவரின் காமெடிகள் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றதாலும் கமலுடன் விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் நடித்தார்.d_i_aஇதைத்தொடர்ந்து சும்மாவே ஆடுவோம், திருட்டு விசில் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். ஆனால் அந்தப் படங்கள் தோல்வி அடைந்தன. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார் சுகுமார். சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.இதை அடுத்து டப்பாங்குத்து படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகியுள்ளது. அதன் பின்பு வெற்றி வேலப்பர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார் .இந்த நிலையில், தன்னை திருமணம் செய்வதாக கூறி சில ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு பணம் மற்றும் நகை மோசடி செய்து விட்டதாக பிரபல துணை நடிகை ஒருவர் காதல் சுகுமார் மீது புகார் அளித்துள்ளார். இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.குறித்த நடிகை வடபழனியில் வசித்து வரும் நிலையில் காதல் சுகுமார் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். ஆனால் அவருக்கு திருமணமாகி ஒரு மகளும் உள்ளார் .இதை அறிந்தும் சுகுமார் துணை நடிகை உடன் கடந்த சில ஆண்டுகளாகவே பழகி வந்த நிலையில் தற்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டது என கூறி, தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக குறித்த புகார் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுகுமாரிடம் தீவிர விசாரணையை செய்து வருகின்றனர்.