Connect with us

பொழுதுபோக்கு

“விஜய்யின் த.வெ.க குறித்து பேச விரும்பவில்லை”: விஷ்ணு விஷால்

Published

on

Vishnu vishal and vijay

Loading

“விஜய்யின் த.வெ.க குறித்து பேச விரும்பவில்லை”: விஷ்ணு விஷால்

விஜய்யின் த.வெ.க குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க தனக்கு விருப்பம் இல்லை என நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.புதுச்சேரி காமராஜர் நகர் 45 அடி சாலையில் தனியார் உடற்பயிற்சி கூடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தனர். இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் விஷ்ணு விஷால் பங்கேற்றார். அப்போது, “உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். எனவே, தவறாமல் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்” ராட்சசன் பட இயக்குநருடன் சேர்ந்து தற்போது மூன்றாவதாக ஒரு படம் நடிக்க இருக்கிறேன். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும், இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளன” எனக் கூறினார்.இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அதற்காக நான் இங்கு வரவில்லை. அது குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.விழாவில் கலந்து கொண்ட நடிகர் கருணாகரன், “அனைவரும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன