Connect with us

திரை விமர்சனம்

ஷங்கர் ராம்சரண் கூட்டணி எப்படி இருக்கு.? கேம் சேஞ்சரா கேம் ஓவரா.? முழு விமர்சனம்

Published

on

Loading

ஷங்கர் ராம்சரண் கூட்டணி எப்படி இருக்கு.? கேம் சேஞ்சரா கேம் ஓவரா.? முழு விமர்சனம்

பிரம்மாண்ட இயக்குனர் இயக்கத்தில் குளோபல் ஸ்டார் நடித்துள்ள கேம் சேஞ்சர் இன்று வெளியாகியுள்ளது. என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நான்கு வருட தாமதத்திற்கு பிறகு வெளியாகி உள்ள இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

Advertisement

கலெக்டர் ஆக இருக்கும் ராம் சரணுக்கும் அரசியல்வாதியான எஸ்ஜே சூர்யாவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் ஒன்லைன்.

ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் ராம்சரண் மீண்டும் தேர்வு எழுதி ஐஏஎஸ் அதிகாரியாக மாறுகிறார். அதன் பிறகு ஊழல் வன்முறையை தடுக்க அதிரடியில் இறங்குகிறார்.

அப்போது முதலமைச்சரின் மகன் எஸ் ஜே சூர்யா தன் அப்பாவிற்கு பிறகு ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார். ஆனால் முதலமைச்சர் ராம் சரணின் அப்பாவுக்கு செய்த அநியாயத்திற்காக வருந்துகிறார்.

Advertisement

இதற்கிடையில் ராம் சரணால் எஸ் ஜே சூர்யாவின் முதலமைச்சர் ஆசைக்கு பிரச்சனை வருகிறது. இந்த போராட்டத்திற்கு நடுவில் தேர்தல் நடந்ததா.?

ராம் சரணின் அப்பாவின் கடந்த காலம் என்ன? அவருடைய போராட்டம் என்ன? எஸ் ஜே சூர்யாவின் அப்பா அவருக்கு என்ன செய்தார? ராம்சரண் நினைத்ததை சாதித்தாரா போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது கேம் சேஞ்சர்.

அப்பா மகன் என இரட்டை வேடத்தில் ராம்சரண் கலக்கி இருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் அவருடைய கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.

Advertisement

அதேபோல் ஆக்ஷன் டான்ஸ் என அனைத்திலும் குறை சொல்வதற்கில்லை. அவருக்கு இணையாக எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு வழக்கம் போல பட்டையை கிளப்பி இருக்கிறது.

திரைக்கதையை பொருத்தவரையில் இடைவேளை காட்சி நன்றாக இருக்கிறது. அதேபோல் முதல் பாதியை விட இரண்டாம் பாதி சிறப்பு.

ஆனால் ஹீரோ ஹீரோயினுக்கு இடையேயான காட்சிகள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அதற்கு பதில் சலிப்பை தான் கொடுக்கிறது. எஸ் ஜே சூர்யா ராம்சரண் இருவரின் டாம் அண்ட் ஜெர்ரி காட்சிகளும் நன்றாக இருக்கிறது.

Advertisement

பாடல்களில் வழக்கம் போல ஷங்கர் பிரம்மாண்டத்தை காட்டியிருந்தாலும் காட்சிகளை பொறுத்தவரையில் வேகத்தடை இருக்கிறது.

ராம்சரனின் ரசிகர்களை பொறுத்தவரையில் இது நல்ல ட்ரீட் தான். ஆனால் மற்ற ஆடியன்ஸ்க்கு சிறு ஏமாற்றமாக இருந்தாலும் தாராளமாக படத்தை பார்க்கலாம். ஆக மொத்தம் கேம் சேஞ்சர் கொஞ்சம் டேஞ்சர்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன