Connect with us

இலங்கை

6 வருடங்களின் பின் விமான நிலையம் செல்ல சொகுசு பேருந்துகளுக்கு அனுமதி!

Published

on

Loading

6 வருடங்களின் பின் விமான நிலையம் செல்ல சொகுசு பேருந்துகளுக்கு அனுமதி!

 6 வருடங்களின் பின்னர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் செல்ல சொகுசு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பாதை இலக்கம் 187 இன் கீழ் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்படும் முனையத்தை வந்தடைய விமான நிலையமும் விமான நிறுவனமும் அனுமதித்துள்ளன.

Advertisement

பயணிகளின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் கோட்டை – கட்டுநாயக்க பஸ்கள் ஏறக்குறைய 6 வருடங்களின் பின்னர் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த பேருந்துகள் விமான நிலையத்திற்குள் தங்கி இந்த பேருந்து சேவையை இயக்க வாய்ப்பு இல்லை.

Advertisement

இலங்கையில் கடந்த 2019 ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க, விமானநிலையத்திற்கான சொகுசு பஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன