பொழுதுபோக்கு
Vanangaan Movie Review Live Update: 6 வருட இடைவெளியை பூர்த்தி செய்தாரா பாலா? வணங்கான் விமர்சனம்!

Vanangaan Movie Review Live Update: 6 வருட இடைவெளியை பூர்த்தி செய்தாரா பாலா? வணங்கான் விமர்சனம்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் பாலா. குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் தனித்தன்மையுடன் கதைகளை தேர்வு செய்து இயக்கி வரும் இவர் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வணங்கான். அருண் விஜய், ரோஷ்னி பிரகாஷ் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.சமுத்தரக்கனி, மிஷ்கின், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் பாலாவுடன் இணைந்து சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பாலா இயக்கத்தில் கடைசியாக 2018-ம் ஆண்டு நாச்சியார் என்ற படம் திரையரங்கில் வெளியானது. தற்போது 6 வருடங்களுக்கு பிறகு, பாலா இயக்கத்தில் திரையரங்கில் படம் வெளியாவதால், வணங்கான் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வணங்கான் படம் இன்று (ஜனவரி 10) வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் தொடங்கிய இந்த படம் அவர் விலகியதால், அருண் விஜய்க்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.