நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 11/01/2025 | Edited on 11/01/2025

ஜீவா கடைசியாக பிளாக் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த அக்டோபரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் பா.விஜய் இயக்கத்தில் பெயரிடாத ஒரு படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் அர்ஜூன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வேல்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ வெளியாகியிருந்தது. படத்திற்கு அகத்தியா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2025 ஜனவரி 31 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 2வது பாடலான என் “இனிய பொன் நிலா…” வெளியிடப்பட்டுள்ளது. அதோடு அகத்தியா கேம் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிகழ்வின் படத்தின் நாயகன் நடிகர் ஜீவா இது குறித்துக் கூறியதாவது, “என்னை ஒரு வீடியோ கேமின் ஒரு பகுதியாகப் பார்ப்பது உண்மையில் நம்பமுடியாத அனுபவம். கேமிங் ரசிகனாக இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த முயற்சி அகத்தியா திரைப்படத்தை இளைய தலைமுறையினரிடம் வெகுவாக எடுத்துச் செல்லும். இந்த கேம் திரைப்படம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் என்றும் நான் நம்புகிறேன்” எனப் பேசினார்.