Connect with us

சினிமா

இந்த மாதிரி கேவலமான நடிகையை பார்த்ததில்லை! நயன் குறித்து ரசிகர் போட்ட அந்த வீடியோ!

Published

on

Loading

இந்த மாதிரி கேவலமான நடிகையை பார்த்ததில்லை! நயன் குறித்து ரசிகர் போட்ட அந்த வீடியோ!

பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் பெமி 9 மெகா செலிப்ரேசன் சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ரசிகர் ஒருவர் ” இந்த மாதிரி ஒரு கேவலமான நடிகையை பார்த்தது இல்லை” என்று டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகளுடன் ஜோலியாக வாழ்ந்து வருகிறார். ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் பிஸ்னஸ் என்று இரண்டிலும் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறார். அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கினாலும் அதனை கண்டுகொள்ளாமல் கடந்து வருகிறார். இந்நிலையில் பெமி 9 பிஸ்னஸில் முன்னேற்றம் அடைந்து வரும் இந்த ஜோடி சமீபத்தில் “பெமி 9 மெகா செலிப்ரேசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். தனது ரசிகர்களுக்கும் மோட்டிவேஷன் பேச்சும் கொடுத்திருந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நபர் ஒருவர் டுவிட் தளத்தில் இவ்வாறு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ” பெமி 9 மெகா செலிப்ரேசன் நிகழ்ச்சிக்கு நிறைய பேரை இன்வைட் பண்ணி இருந்தாங்க. அந்த நிகழ்வில் நிறைய நல்ல விடயங்களை சொல்லி யூஸ்புல்லா செஞ்சி இருந்தாங்க. சிறப்பாக விற்பனை செய்த நபர்களுக்கு அவாட் கொடுத்ததாக” கூறினார்.மேலும் ” நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காலையில் 9:00 மணிக்கு வருவதாக சொல்லி இருந்தார்கள். ஆனால் இவங்க 6 மணித்தியாலையம் லேடா வந்தாங்க. இவங்களுக்காக நிறைய பேர் அங்க காத்திருந்தாங்க இவங்க வந்த பிறகு நிகழ்ச்சி முடியவே 6:00 மணியாகிட்டு நிறைய பேர் அவங்களுடைய ட்ரெயின், பஸ் எல்லாம் மிஸ் பண்ணிட்டு நிண்டாங்க.எல்லாம் முடிஞ்சி மீட்அப்க்கு வரும் போது விக்னேஷ் சிவன் உங்களுக்கு என்ன போட்டோ தானே எடுக்கணும் வாங்க எடுக்கலாம் என்று ஒரு மாதிரி சொன்னாரு அங்க இருந்த நிறைய பேருக்கு அது ஒரு மாதிரி ஆகிட்டு ஆனாலும் பெருசுபடுத்தாம போட்டோ எடுத்துட்டு கிளம்பிட்டாங்க. என் வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு கேவலமான நடிகையை பார்க்கவில்லை” என்று வீடியோ ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன