Connect with us

சினிமா

சூசகத்தை சரியாக புரிந்து கொண்ட பாலா.. வணங்கான் வெற்றிக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

Published

on

Loading

சூசகத்தை சரியாக புரிந்து கொண்ட பாலா.. வணங்கான் வெற்றிக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சூர்யா இந்த படத்தை மிஸ் பண்ணி விட்டார் என்று சொல்லும் அளவுக்கு படம் அமைந்திருக்கிறது.

இயக்குனர் பாலாவை பொறுத்தவரைக்கும் சமீப காலமாக அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி படங்கள் இல்லை.

Advertisement

அதே மாதிரி அருண் விஜய்க்கும் இந்த படம் என்னை அறிந்தால் விக்டர் கேரக்டருக்கு பிறகு கிடைத்த வெற்றி கேரக்டர் என்று சொல்கிறார்கள்.

படத்தின் வெற்றிக்கு பலதரப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகிறது. இதில் முக்கிய காரணம் இயக்குனர் பாலா.

தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்த வரைக்கும் பாலா படம் என்றால் ஓரளவுக்குத்தான் ரசிகர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். இதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக்களம் கூட சொல்லலாம்.

Advertisement

இதை தாண்டி பாலா மக்களிடம் நெருக்கம் இல்லாத ஒரு இயக்குனர். பொதுவாக அவருடைய படங்களை தாண்டி பாலா எப்படிப்பட்டவர், எப்படி பேசுவார் என யாருக்குமே தெரியாது.

பாலா தன்னுடைய படத்தில் நடிக்கும் ஹீரோக்களை டார்ச்சர் பண்ணுவார், அடிப்பார் என்பதுதான் வெளியில் பரவலாக பேசப்படும் பேச்சு.

இதைத் தாண்டி வணங்கான் பட ரிலீஸ் சமயத்தில் முதல்முறையாக பாலா தன்னுடைய மனம் திறந்து நிறைய விஷயங்களை பேசினார்.

Advertisement

இதனால் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் அவர் மீது அதிகமாக பதிந்தது. எப்படியோ நெனச்சா, இவர் இவ்வளவு நல்லவரா இருக்காரே என சொல்லும் அளவுக்கு அவருடைய பேச்சை இருந்தது.

இதன் பின்னால் வணங்கான் படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

படத்தின் வெற்றிக்கும் இயக்குனர் மக்களுக்கு கொஞ்சமாவது நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்ற சூசகத்தை புரிந்து இருக்கிறார் இயக்குனர் பாலா.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன