பொழுதுபோக்கு
‘மதுரை பொண்ணு மாதிரி பேசி நடிக்க ஆசை’: மனம் திறந்த மிருணாளினி

‘மதுரை பொண்ணு மாதிரி பேசி நடிக்க ஆசை’: மனம் திறந்த மிருணாளினி
தமிழில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மிருணாளினி. சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்தவர் இவர். அதன் பின் எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, எனிமி, ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.இந்நிலையில், மதுரையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை மிருணாளி, மதுரை பொண்ணு போல பேசி நடிக்க ஆசையாக உள்ளதாக கூறினார். தொடர்ந்து, பொங்கல் நேரத்தில் நான் மதுரை வந்ததே கிடையாது. இங்க ஊரே திருவிழா கோலமாக உள்ளது. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மதுரை பொண்ணு மாதிரி பேச ஆசையாக உள்ளது. எனக்கு அவர்கள் பேசுவதுபோல் பேச தெரியாது. ஆனால், வாய்ப்பு கிடைத்தால் அதை கற்றுக் கொண்டு நடிப்பேன். ஆனால், அது எனக்கு சரியாக வரவில்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது, மதுரை பொண்ணு மாதிரி பேசிவிட்டார் என்று சொன்னால் கூட போதும்’என்றார்.