சினிமா
ஷார்ட்ஸ்,செருப்புடன் லேட் நைட் டின்னர் பார்ட்டியில் சித்தார்த் ஜோடிஅதிதி கொடுத்து வச்சவங்க

ஷார்ட்ஸ்,செருப்புடன் லேட் நைட் டின்னர் பார்ட்டியில் சித்தார்த் ஜோடிஅதிதி கொடுத்து வச்சவங்க
சித்தார்த் – அதிதி ராவ் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடனும் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. அதில் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள்.நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். அதேபோல அதிதி ராவும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவர்கள் இருவரும் ஆயுதம் செய் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.d_i_aஇதை தொடர்ந்து சித்தார்த்தும் அதிதி ராவும் காதலிப்பதாக பல கிசு கிசு தகவல்கள் வெளியானது. ஆனாலும் அதற்கெல்லாம் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இருவரும் மௌனம் காத்தனர். எனினும் திடீரென ஒருநாள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமண புகைப்படமும் லேட்டாகத்தான் இணையத்தில் வெளியானது.இந்த நிலையில், நடிகர் சித்தார்த் ஷார்ட்ஸ் மற்றும் செருப்பு அணிந்தபடி அதிதி ராவுடன் லேட் நைட் டின்னர் சாப்பிட்டு வந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இதன்போது அதிதி ராவின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவரை பத்திரமாக காரில் ஏற்றிவிடும் காட்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அதில் சித்தார்த், அதிதி ராவின் காதல் மற்றும் அரவணைப்பு ஆகியவை ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ..,