இலங்கை
கார் ஓட்டப் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணிக்கு மூன்றாவது இடம்

கார் ஓட்டப் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணிக்கு மூன்றாவது இடம்
டுபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ஓட்டப் பந்தயத்தில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இதற்கமைய தனது அணி 3ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில் நடிகர் அஜித் குமார் இந்தியத் தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க நடிகர் அஜித் குமார் தயாராகிவந்தநிலையில், இறுதி நேரத்தில் அவர் பந்தயத்திலிருந்து விலகிக்கொண்டார்.
எனினும் அஜித் குமாரின் அணி இதில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த வெற்றிக்குத் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.