Connect with us

இலங்கை

வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி… வெளியான பரபரப்பு காரணம்!

Published

on

Loading

வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி… வெளியான பரபரப்பு காரணம்!

கண்டி – அம்பரப்பொல பகுதியில் கருப்பு வேனில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் பொலிஸார் நடாத்திய விசாரணையில் வெளியாகியுள்ளன.

இந்தக் கடத்தலின் ஈடுபட்ட முக்கிய சந்தேகநபர் மாணவியின் தந்தையின் சகோதரி மகன் என தெரியவந்துள்ளது.

Advertisement

கடத்தப்பட்ட மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரண்டு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சந்தேகநபர் மாணவியை கடத்திச் சென்றுள்ளமை பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கண்டி – அம்பரப்பொல பகுதியில் நேற்றையதினம் (11-01-2025) இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன