Connect with us

சினிமா

உடல்ரீதியாக உதறித்தள்ளிய தயாரிப்பாளர்கள்!! ரூ. 100 கோடியில் பங்களா சொத்துக்கு அதிபதி..

Published

on

Loading

உடல்ரீதியாக உதறித்தள்ளிய தயாரிப்பாளர்கள்!! ரூ. 100 கோடியில் பங்களா சொத்துக்கு அதிபதி..

சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்றால் பல இன்னல்கள் அவமானங்களை சந்தித்தப்பின் தான் வெற்றி பெறுவார்கள். அப்படியான நிலையில் இருந்து தற்போது கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார் பிரபல நடிகை ஒருவர். அவர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தான்.ஆரம்பத்தில் பல தயாரிப்பாளர்களிடம் இருந்து பல நிராகரிப்புக்களை சந்தித்த ஷில்பா ஷெட்டி, தற்போது தனக்கான ஒரு இடத்தினை பிடித்துள்ளார்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் கருமையாகவும், ஒல்லியாக உயரமாக இருந்ததால் நடிப்பு தொழிலை தொடங்கினேன். ஷூட்டிங் முடிந்து என் அப்பாவுடன் வேலை செய்வேன் என்றும் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை.ஆனால் ஒரு வேடிக்கைக்காக ஒரு பேஷ் ஷோவில் பங்கேற்றபோது புகைப்படக் கலைஞர் என்னை பார்த்து படம் எடுக்கச்சொல்லியதால் அப்படியே என் வாழ்க்கை மாறியது.17 வயதில் நடிக்க ஆரம்பித்தபோது இந்தி பேசத் தெரியாமல், கேமரா முன் நிற்பதை நினைத்து பதட்டம் அடைந்தேன். சில படங்களுக்கு பின் என் கேரியர் முடிவடையும் நிலையை அடைந்ததால் தயாரிப்பாளர்கள் நிராகரித்தனர்.ஆனால் நான் விடாப்பிடியாக இருந்து இவ்வளவு தூரம் வந்தப்பின் ஒரு அடி கூட பின்வாங்காமல் இறுதியாக வெற்றிப்பெற்றபோது பாராட்டினார்கள். நான் காட்டிய விடாமுயற்சியும் போராட்ட குணமும் தான் வெற்றியைத் தந்தது என்று பகிர்ந்துள்ளார் ஷில்பா ஷெட்டி.தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து குழந்தை பெற்ற ஷில்பாவுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா உள்ளிட்ட ஆடம்பர சொத்துக்கள் இருக்கிறது. தனி ஜெட் விமானமும் சொந்தமாக வைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன