Connect with us

சினிமா

சிக்கலில் இருந்த விஜய் மகன்.. உதவ வந்த அஜித்! என்ன நடந்தது தெரியுமா

Published

on

Loading

சிக்கலில் இருந்த விஜய் மகன்.. உதவ வந்த அஜித்! என்ன நடந்தது தெரியுமா

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார்.இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தபின் படப்பிடிப்பு துவங்காமல் இருந்த நிலையில், சஞ்சய் சற்று மனமுடைந்துபோய் வேறு தயாரிப்பு நிறுவனத்தை அணுகலாமா என, தனது நலம்விரும்பியான சுரேஷ் சந்திராவிற்கு கால் செய்து கேட்டுள்ளார்.அஜித்தின் மேலாளராக இருப்பவர் சுரேஷ் சந்திரா. சஞ்சய் போன் கால் செய்தபோது, சுரேஷ் சந்திராவின் அருகில் அஜித்தும் இருந்தாராம், அப்போது அந்த போனை சுரேஷ் சந்திராவிடம் இருந்து வாங்கிய அஜித், சஞ்சய்யிடம் நலம் விசாரித்து, அவருடைய முதல் படத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.மேலும் பேசிய அஜித், “இப்படத்தில் எதாவது பிரச்சனை என்றால் என்னிடம் தயங்காமல் கூறு, நான் உனக்கு வேறு நல்ல தயாரிப்பு நிறுவனத்தை கூறுகிறேன்” என அஜித் பேசினாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன