இலங்கை
தமிழர் பகுதியில் பரபரப்பு…மாயமான இளைஞன் சடலமாக மீட்பு! கொலையா? தற்கொலை?

தமிழர் பகுதியில் பரபரப்பு…மாயமான இளைஞன் சடலமாக மீட்பு! கொலையா? தற்கொலை?
முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் இளைஞன் ஒருவர் சடலமாக கண்டடுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுதந்திரபுரம் கிராமத்தினை சேர்ந்த 28 வயதான பிலிப்குமார் டினோஜன் என்ற இளைஞன் கடந்த 11ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.
உறவினர்கள் அவரை தேடிவந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்றையதினம் (13-01-2025) குறித்த இளைஞனது சடலம் வீட்டு கிணற்றில் மிதந்ததனை அவதானித்துள்ளனர்.
பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸிற்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த இளைஞனின் மரணம் தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.