சினிமா
தல -தளபதி என சண்டை போடுபவர்களுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்..!

தல -தளபதி என சண்டை போடுபவர்களுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்..!
தல அஜித் எப்போதும் மீடியாவிடம் இருந்து விலகியிருக்கும் ஒரு நடிகராக இருக்கிறார். ஆனால் தற்போது துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸில் பங்கேற்ற பிறகு அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான பேட்டி கொடுத்துள்ளார்.பேட்டியில் அவர் தனது ரசிகர்களுக்கு ஆழ்ந்த அறிவுரைகள் வழங்கியுள்ளார்.அதாவது “அஜித் வாழ்க, விஜய் வாழ்க.. நீங்க எப்போ வாழ போறீங்க?” என்று தனது ரசிகர்களிடம் கேட்ட அஜித் “நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால் தயவுசெய்து உங்கள் வாழ்க்கையை பாருங்க” என கூறியுள்ளார்.மேலும் “என் ரசிகர்கள் வாழ்க்கையில் சிறப்பாக சாதிக்கிறார்கள் என அறிந்தாலும் நானும் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த பேட்டி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது மேலும் அவரது வார்த்தைகள் பலரின் இதயங்களை தொட்டுள்ளது.