Connect with us

இலங்கை

தினமும் 1 எலுமிச்சை பழம் சாப்பிட்டு வந்தால் இத்தனை நன்மைகளா?

Published

on

Loading

தினமும் 1 எலுமிச்சை பழம் சாப்பிட்டு வந்தால் இத்தனை நன்மைகளா?

எலுமிச்சம் பழம் வைட்டமின் சியின் ஆதாரம் என எல்லோருக்கும் தெரியும். வைட்டமின் சி மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி, இரும்புச் சத்து உறிஞ்சலுக்கும் உதவும் எலுமிச்சையை தினமும் எடுத்துக் கொள்வதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம் வாங்க.

எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

Advertisement

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சளி மற்றும் காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து உடலைப் பாதுகாக்க உதவும்.

நீங்கள் இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டு இருந்தால் அதில் இருந்து நிவாரணம் பெற எலுமிச்சையைப் பயன்படுத்தலாம்.

ஒரு கிளாஸ் சூடான தண்ணீரில் பாதி எலுமிச்சையின் சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து அருந்தலாம். இதன் மூலம் இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை பெறலாம்.

Advertisement

எலுமிச்சையில் உள்ள பெக்டின் கலவை உண்ட பின் நார்ச்சத்தாக விரிவடையும். இது உங்களை நீண்ட நேரத்துக்கு முழுமையாக உணர வைக்கும்.

உடல் எடை இழப்பில் எலுமிச்சையின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து எடுத்துக் கொள்வது எடை இழப்பை ஊக்குவிக்கும் ஒரு அருமையான பானமாகும்.

எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஒட்டுமொத்த எடை மேலாண்மைக்கு உதவுவதாக விலங்குகளைக் கொண்டு நடத்திய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறுடன் அன்றைய நாளைத் தொடங்குவதன் மூலம் ஒருவரின் செரிமான செயல்முறை மேம்படுத்தப்படும்.

ஏனெனில், எலுமிச்சையில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன.

இவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, குடல் இயக்கத்தையும் ஒழுங்குபடுத்தும். எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் சர்க்கரையின் செரிமான விகிதத்தை அதிகரித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Advertisement

எலுமிச்சம் பழத்தின் புத்துணர்ச்சியூட்டும் பிரெஷ்ஷான மணம், உங்களின் மனதை அமைதிப்படுத்துவதோடு, மன அழுத்தம் மற்றும் கவலையையும் குறைக்கும்.
எலுமிச்சையில் உள்ள இயற்கையான மூலக்கூறுகள் மனநிலையை மேம்படுத்த உதவும்.
தினமும் காலை அல்லது மாலை வேளையில் எலுமிச்சை சாறு நிறைந்த ஜூஸை அருந்துவதன் மூலம் உங்களின் மனம் அமைதியடையும்.

எலுமிச்சையில் காணப்படும் இயற்கையான கலவையான ஹெஸ்பெரிடின் எனப்படும் கலவை, இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கார்போஹைட்ரேட்டை சர்க்கரையாக மாற்றும் நிகழ்வை மெதுவாக்கும்.

Advertisement

இதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவு நிர்வகிக்கப்படும். அதேபோல், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் எலுமிச்சை உதவும்.

தினமும் எலுமிச்சை பழத்தை உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சிக்குப் பின் எடுத்துக் கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன