சினிமா
நாளை வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்பட அப்டேட்..! உறுதி செய்த இயக்குநர்..

நாளை வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்பட அப்டேட்..! உறுதி செய்த இயக்குநர்..
மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித் மற்றும் திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகியுள்ள நிலையில் நாளைய தினம் பொங்கல் நாளை முன்னிட்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.இருப்பினும் ஒரு சில காரணங்களினால் வெளியீட்டினை படக்குழு ஒத்தி வைத்துள்ளது.அனிருத் இசையமைத்துள்ள இப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த நிலையில் தற்போது இப் படம் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி தனது x தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.அவரது பதிவில் “நாளை தயாராகுங்கள் விடாமுயர்ச்சி” என இரண்டு பயர் சின்னங்களை போட்டுள்ளார்.முன்னர் கூறியது போன்று இப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக பெரிதும் வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.