சினிமா
ரஜினி போட்ட அதிசய ட்விட்டின் உள்குத்து..? லிஸ்ட்டு ரொம்ப நீளுதே..!! வெளியான ஷாக் போஸ்ட்

ரஜினி போட்ட அதிசய ட்விட்டின் உள்குத்து..? லிஸ்ட்டு ரொம்ப நீளுதே..!! வெளியான ஷாக் போஸ்ட்
தமிழ் சினிமாவில் அஜித் குமார் பிரபல நடிகராக காணப்பட்டாலும் அவருக்கு கார், பைக் ரைஸ் என்றால் அலாதி பிரியம். இதற்காகவே சில ஆண்டுகளாக சினிமாவில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது அதில் களம் இறங்கி உள்ளார்.சுமார் 24 மணி நேரம் இடைவிடாது கார் ஓட்டும் பந்தயத்தில் போட்டியிடுவதற்காக கடந்த சில மாதங்களாகவே துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் அஜித். அந்த பந்தயத்தில் யார் அதிக தூரம் கார் ஓட்டி இருக்கின்றார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.குறித்த ரேஸில் அஜித் பங்கேற்றதால் அதனைப் பார்ப்பதற்காக துபாயில் ரசிகர் கூட்டம் அலைமோதியது. ரசிகர்களின் பேரன்பால் திளைத்த அஜித் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்து இருந்தார். மேலும் ரசிகர்களோடு கோலிவுட் பிரபலங்கள் பலரும் அஜித்திற்காக நேரிலேயே சென்றிருந்தார்கள். d_i_aதுபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித் வெற்றி பெற்றதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்தை தவிடு பொடியாக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அவருடைய பதிவு பலரது கவனம் ஈர்த்து வருகின்றது.அதன்படி அவர் வெளியிட்ட பதிவில், கார் ரேசில் தல வென்றதற்கு தலீவர் வாழ்த்து ட்வீட் போட்டுள்ளார்.அரசியலுக்கு வர பயந்து புறமுதுகிட்டு ஓடியவர்.. தான் உண்டு. தன் ஷூட்டிங், டப்பிங் உண்டு என இருக்க மனமில்லை.நான் முன்பு சொன்னதுபோல.. தமிழக அரசியலை தீர்மானிக்கும் கிங் மேக்கராக.. அதாவது தனது குருநாயர் சோ அவர்களைப்போல ஆகவேண்டுமென முயல்கிறார்.ஆனால் சோவிற்கு உள்ள அரசியல் அறிவில் 1% கூட இவருகில்லை என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் அது இவருக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யமே இலதலீவருக்கு இரண்டே ஆசைகள்தான்.1.தனது எஜமானர்களின் நீண்டகால எதிரியான திமுக தோற்க வேணடும்.2. திரைப்பட வியாபாரம் மற்றும் வசூலில் தன்னை தோற்கடித்த விஜய் மீதான காண்டு.விஜய் இனி படங்களில் நடிப்பதில்லை என்றதும் கொஞ்சம் பெருமூச்சு விட்டார்.ஆனால் தற்போது அரசியலுக்கு வந்து ஜெயித்து விடுவாரோ எனும் பதட்டம் தொற்றிக்கொண்டது.விஜய் முதல்வராக உள்ள மாநிலத்தில் வாழ்வதை தலீவரால் ஜீரணிக்கவே இயலாது.இந்த புத்தாண்டில் நல்லவனை ஆண்டவன் கை விட மாட்டான். கெட்டவங்களை கை விட்ருவான் என குறிப்பிட்டார்.எப்போதுமே வெறும் வாழ்த்து செய்தி மட்டும் போடுபவர்.. இம்முறை இப்படி ஒரு உள்குத்தை சொருகியுள்ளார்.அதாவது விஜய் கெட்டவராம். அஜித் நல்லவராம்.தற்போது அஜித் ரேசில் வென்றதற்கு.. திடீர் அதிசயமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதாவது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை மறைமுகமாக சீண்டுகிறாராம்.தலீவரே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று 2026 தேர்தல் முடிந்த பிறகு வர வாய்ப்புணடு.ஒருவேளை தேர்தலில் தவெக தோற்றால் விஜய் அரசியலை விட்டு விலகலாம் அல்லது கமலை போல சினிமாவில் நடித்தபடியே பார்ட் டைம் அரசியல் செய்யலாம்.அப்படி ஒரு நிலைமை வந்தால்… மீண்டும் அவர்தான் வியாபாரம் மற்றும் வசூலில் நம்பர் ஒண்ணாக இருப்பார்.தலீவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படத்தின் வசூல்.. GOAT வசூலில் 30% கூட இல்லை.ஆகவே… மின்சார கண்ணாவால்.. தலீவருக்கு காலம் முழுக்க ஷாக் உறுதி. அவர் உங்களை நிம்மதியாக தூங்கவே விடமாட்டார்….. என குறிப்பிட்டுள்ளார்