இலங்கை
சீனாவை சென்றடைந்த ஜனாதிபதி!

சீனாவை சென்றடைந்த ஜனாதிபதி!
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று சீனா நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடோங் வரவேற்றதோடு சீன இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.