Connect with us

இலங்கை

தைப்பொங்கல் பண்டிகை இன்று! உறவுகள் அனைவருக்கும் தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்

Published

on

Loading

தைப்பொங்கல் பண்டிகை இன்று! உறவுகள் அனைவருக்கும் தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்

லங்கா4 சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நாள் வாழ்த்துக்கள்…

 தை மாத பிறப்பை வரவேற்கும் முகமாகவும், விவசாயத்துக்கு உதவிய சூரியன் விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் தை முதல்நாளில் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Advertisement

 குடும்பத்துடன் ஒற்றுமையாக கொண்டாடும் ஒரு பண்டிகையாக தைப்பொங்கல் பண்டிகை திகழ்கின்றது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா இன்று(14) செவ்வாய்க்கிழமை தமிழர் வாழும் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

 இது ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

Advertisement

உலகமே உணவை நம்பி இருக்கிறது. 

அதற்கு அடிப்படை விவசாயம் ஆகும். விவசாயத்துக்கு முக்கியமாக விவசாயி தேவை. இரண்டுக்கும் முக்கியமானவன் சூரியன். அந்த சூரியனை நன்றியோடு நினைந்து வழிபடுகின்ற இயற்கை திருவிழா.

உழவு இல்லையேல் உலகில்லை. 

Advertisement

வள்ளுவரும் அதனை அழகாக கூறியிருக்கின்றார். இயற்கையையே தெய்வமாக வழிபட்டு வந்த முன்னோர்களின் பாரம்பரியம் தற்போது 2025 தைப்பொங்கல் பண்டிகை வரை வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 விவசாயத்திற்கு ஆதாரமான சூரியன், மழைக்கு அதிபதியான இந்திரதேவன் மற்றும் விவசாயத்திற்கு உதவி செய்யும் கால்நடைகள் ஆகிய அனைத்திற்குமே நன்றி செலுத்தி வழிபடுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகை, தைத் திருநாள் கொண்டிருக்கும் ஆன்மீக ரீதியான முக்கியத்துவம்

Advertisement

இதே போல ஒரு பக்கம் வாழ்க்கை முறையோடு இணைந்திருக்கும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் ஒரு மிகப்பெரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.

 ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பன்னெடுங்காலமாக நம் நாட்டில்
வழக்கத்தில் உள்ள பழமொழியும் பொன்மொழியுமாகும். கிராமத்தில் இன்றளவும் தைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதுவாக இருந்தாலும் தை பிறக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள்.

Advertisement

 ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் பொங்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

லங்கா4 சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நாள் வாழ்த்துக்கள்…

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன