சினிமா
பிக்பாஸ் 8 வீட்டுக்கு சென்ற நடிகை லாஸ்லியா!! பிக்பாஸ் சொன்ன அந்த வார்த்தை..

பிக்பாஸ் 8 வீட்டுக்கு சென்ற நடிகை லாஸ்லியா!! பிக்பாஸ் சொன்ன அந்த வார்த்தை..
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை தாண்டி இறுதி கட்டத்திற்கு சென்றுள்ளது. ஏற்கனவே டாப் 6 போட்டியாளர்களுக்கான பணப்பெட்டி எடுக்கும் போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத பிக்பாஸ் பணப்பெட்டிக்கு புது ரூல் போடப்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிக்பாஸ் 8 வீட்டிற்குள் முன்னாள் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான லாஸ்லியா சென்றுள்ளார். அவர் நடிப்பில் வெளியாகவுள்ள Mr. House keeping படத்தின் பிரமோஷனுக்காக கதாநாயகன் ஹரி பாஸ்கருடன் சென்றுள்ளார்.வீட்டில் சென்று பிக்பாஸிடம், உங்களை ரொம்பவும் மிஸ் செய்தேன் என்றும் நாம் சீக்ரெட்டாக ரெண்டு பேரும் பேசுவோம் அதை மிஸ் பண்ணினேன் என்றதும் எப்போ நீங்க தூங்கும் போது கன்ஃபெக்ஷன் ரூமுக்கு கூப்பிட்டு சொன்னேனே அதுவா என்று பிக்பாஸ் கேட்டுள்ளார்.மேலும், நான் எப்படி இருக்கிறேன், 5 வருடம் ஆகிவிட்டது என்று லாஸ்லியா கேட்க, வளர்ந்து இருக்கீங்க, பார்க்க பெருமையாக இருக்கு சாப்பிடுங்க என்று பிக்பாஸ் பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.