Connect with us

இலங்கை

மலையக பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்!

Published

on

Loading

மலையக பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்!

தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழ்கின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.

Advertisement

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில் வழிபடுவார்கள்.

ஆண்டுதோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.

அந்தவகையில் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தைப்பொங்கல் பண்டிகையை இன்று செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

Advertisement

ஹட்டன் பகுதியில் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ சந்திரானந்த குருக்கள் தலைமையில் தைப்பொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன