சினிமா
உங்க குடும்பங்களை விரைவில் சந்திப்பேன்.! நன்றியுடன் அஜித் வெளியிட்ட வைரல் வீடியோ

உங்க குடும்பங்களை விரைவில் சந்திப்பேன்.! நன்றியுடன் அஜித் வெளியிட்ட வைரல் வீடியோ
பிரபல நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற 24 ஹவர்ஸ் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் என்ற தனது சொந்த அணியின் சார்பில் கலந்து கொண்டார். இதில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தது.இதன்போது பேட்டி கொடுத்த அஜித் குமார், இனிமேல் கார் ரேசிங் நடைபெறும் சீசன்களில் படங்களில் நடிக்க போவதில்லை என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதன்படி அக்டோபர் முதல் மார்ச் வரை எந்த படங்களிலும் அஜித் குமார் நடிக்க போவதில்லை என்ற முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவே காணப்பட்டது.d_i_aஅஜித்குமார் ஓட்டுநராக களம் இறங்கி வாகனம் ஓட்டிய போர்ஸ்சே ஜிடி4 பிரிவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவரது அணிக்கு ‘ஸ்பிரிட் ஆஃப் தி கேம்’ விருது வழங்கப்பட்டது. மேலும் இதன்போது அஜித் தனது வெற்றியை கொண்டாடிய காட்சி சமூக வலைத்தள பக்கங்களில் கடும் வைரலானது.இந்த நிலையில், கார் ரேசிங் பந்தயத்தில் உதவிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அவருடைய வீடியோ வைரல் ஆகி வருகின்றது.அதன்படி அவர் கூறுகையில், நான் என்னுடைய ரேசிங் அணிக்கு கடமைப்பட்டுள்ளேன். நாங்கள் உங்களுடைய ஆதரவு வாழ்த்துக்கள் மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். உங்கள் குடும்பங்களை விரைவில் சந்திப்போம் என நம்புகின்றேன். உங்களுடைய நலன்களை பார்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.மேலும்பந்தைய காணிப்பாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துபாய் ஆட்டோட்ரோம் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி என அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் அஜித் குமார்.